
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக இலங்கை கைப்பற்றி அசத்தியது.
பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையே கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 159.2 ஓவர்களில் 482 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியில் கருணாரத்னே அதிகபட்சமாக 196 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 90.3 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை தரப்பில் தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற இலங்கை தனது 2-வது இன்னிங்ஸில் 96 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
பாகிஸ்தான் 317 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கி 248 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இலங்கை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
பாகிஸ்தானில் ஆஸாத் ஷஃபிக் அதிகபட்சமாக 112 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கையின் தில்ருவன் பெரேரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அந்த அணியின் கருணாரத்னே ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆகிய விருதுகளைத் தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின்மூலம் தொடரை மொத்தமாக கைப்பெற்றியது இலங்கை அணி.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.