
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பூஜா கட்கர் வெண்கலம் வென்றார்.
தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முன்னாள் ஆசிய சாம்பியனான பூஜா கட்கர், இறுதிச்சுற்றில் 228.8 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் உலகக் கோப்பையில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் பூஜா கட்கர்.
இதே பிரிவில் சீனாவின் மெங்யாவ் ஷி 252.1 புள்ளிகளுடன் தங்கம் வென்றதோடு, புதிய உலக சாதனையும் படைத்தார்.
மற்றொரு சீன வீராங்கனையான டாங் லிஜீ 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.