
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி இறுதிச் சுற்றிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைப்பெற்றது.
இந்த அரையிறுதியில் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் லத்வியாவின் அனாஸ்டாஸியா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.
இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றிற்கு முன்னேற்றம் அடைந்தார்,.
மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா - எலினா வெஸ்னினா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.