
புதிய வருமானப் பகிர்வு முறையின்படி, ஐசிசி கூடுதலாக கொடுக்க முன்வந்த ரூ.643 கோடியை பிசிசிஐ நிராகரித்துள்ளது.
ஐசிசி சேர்மன் சஷாங்க் மனோகர், புதிய வருமானப் பகிர்வு முறையின்படி பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.643 கோடி வழங்க முன்வந்தார். இதுகுறித்து யோசித்து முடிவு கூற அவகாசம் வழங்கினார். எனினும், புதிய வருமானப் பகிர்வு முறையை ஒப்புக்கொள்ள விரும்பாததால், அந்த வருமானத்தை பிசிசிஐ ஏற்கவில்லை.
இந்தக் கூடுதல் வருமான முடிவானது, சேர்மனாக இருக்கும் சஷாங்க் மனோகர் மேற்கொண்டதாகும். யாருக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை ஐசிசியின் உறுப்பினர்களான அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்ய வேண்டுமே தவிர, சேர்மன் முடிவு செய்ய முடியாது.
பிசிசிஐ-க்கு வழங்கப்பட்டு வரும் தொகையை குறைத்து, அதனை இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்க மனோகர் முயற்சிக்கிறார்.
எங்களை பொருத்த வரையில், பிசிசிஐயின் வருமானத்தை குறைக்காமலே, இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வருமானப் பகிர்வு முறையை உறுதியளிக்கிறோம்.
புதிய வருமானப் பகிர்வு முறை தொடர்பாக அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியத்துடனும் கலந்தாலோசித்து வருகிறோம். அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர் என்றார்.
தற்போதுள்ள வருமானப் பகிர்வு முறைப்படி, ஐசிசியிடம் இருந்து பிசிசிஐக்கு ரூ.3 ஆயிரத்து 727 கோடி கிடைக்கிறது.
சஷாங்க் மனோகரின் முன்மொழிவை ஏற்கும் பட்சத்தில், பிசிசிஐயின் பங்கானது ஆயிரத்து 867 கோடியாகக் குறையும்.
இதனை, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழுவும் கூட ஏற்கவில்லை. அத்துடன், குழுவின் தலைவர் விக்ரம் லிமாயி ஐசிசி கூட்டத்தில், புதிய வருமானப் பகிர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.