நாளுக்கு நாள் டோனிக்கு ‘எனர்ஜி’ கூடுவதன் ரகசியம் என்ன? இந்த விடியோவைப் பாருங்க...

Asianet News Tamil  
Published : May 21, 2018, 04:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
நாளுக்கு நாள் டோனிக்கு ‘எனர்ஜி’ கூடுவதன் ரகசியம் என்ன? இந்த விடியோவைப் பாருங்க...

சுருக்கம்

Thala having some fun with ziva WhistlePodu

டோனிக்கு வயதாகிவிட்டது என பலரும் விமர்சித்தனர். ஆனால் நாளுக்கு நாள் அவரது ‘எனர்ஜி’ கூடுவதன் ரகசியம் இந்த விடியோவைப் பாருங்க டோனிக்கும் எனர்ஜி டானிக் யாருன்னு தெரியும்.

‘தல’ டோனியின் ஃபினிஷிங் சிக்சருடன் அவரது ரசிகர்களின் கொண்டாட்டம் நின்று விடுவதில்லை. டோனி கிரவுண்ட்ல தனது மகளுடன் கொஞ்சி ‘விளையாடுவது’ம் ரசிகர்களுக்கு  ட்ரீட்தான்.

டோனியின் மகள் ஸிவா தனது தந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்று இப்போது செமையாக வைரல் ஆகியிருக்கிறது. கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிக்கு இடையே டோனி சில நிமிடங்களை தந்து மகளுடன் செலவு செய்கிறார். அந்தத் தருணத்தில் ஸிவா-வை, டோனியின் தொப்பியில் இடம் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ‘லோகோ’வான சிங்கம் கவர்ந்து விடுகிறது.

உடனே டோனியின் தலையில் இருக்கும் தொப்பியை எட்டிப் பிடித்து கையில் எடுக்கிறாள், குட்டிப் பெண் ஸிவா. மீண்டும் அந்தத் தொப்பியை டோனியின் தலையில் அணிவிக்க முயற்சிக்கிறாள். தொடர்ந்து உற்சாகம் பொங்க மைதானத்தில் குதிகுதியென குதிக்கிறாள் ஸிவா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது. டோனியின் ரசிகர்களால் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ வைரல் ஆகி, ஸிவாவை ‘இண்டர்நெட் டார்லிங்’ ஆக்கியிருக்கிறது பார்க்கிறவர்களுக்கே உற்சாகத்தை அள்ளித் தரும் இந்தக் காட்சிகள்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து