தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன்; சாய்னா, சாய் முன்னேற்றம்…

Asianet News Tamil  
Published : Jun 03, 2017, 11:08 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன்; சாய்னா, சாய் முன்னேற்றம்…

சுருக்கம்

Thailand Open Grand Prix Gold Patmundan Saina Sai Progress

தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சாய் பிரணீத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் ஜப்பானின் ஹருகோ சுஸுகி மோதினர்.

இதில் 21-15, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் சுஸுகியைத் தோற்கடித்தார் சாய்னா.

சாய்னா தனது அரையிறுதியில் தாய்லாந்தின் புஸானன் ஆங்பம்ருங்பானுடன் மோதுகிறார்.

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் சாய் பிரணீத், தாய்லாந்தின் கன்டப்பான் வாங்சரோன் மோதியதில் 21-16, 21-17 என்ற நேர் செட்களில் வாங்சரோனை தோற்கடித்தார் சாய் பிரனீத்.

சாய் பிரணீத் தனது அரையிறுதியில் தாய்லாந்தின் பன்னாவிட் தோங்நுயாமுடன் மோதுகிறார்,

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக் பாண்டியா சொன்ன அந்த ஒரு வார்த்தை... மொத்த மேட்ச்சையும் மாத்திய திலக் வர்மா! அப்படி என்ன சொன்னார்?
Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!