
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. ஆனால் தற்போது பலர் இருக்கின்றனர் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரேய் ஜென்னிங்ஸ் விமர்சித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரேய் ஜென்னிங்ஸ் நேற்று செய்தியாளர்களுகு பேட்டியளித்தார்.
அதில், "டெஸ்ட் தொடருக்காக தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் ஆடுகளத்தை சாதகமாக மாற்ற முயற்சித்தது. ஆனால், அது அந்த அணிக்கே பாதகமாக மாறி, நூலிழையில் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அவர்கள் ஆடுகளத்தை மாற்ற முயன்றனர். இந்திய அணியில் தற்போது சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால், அது தென் ஆப்பிரிக்காவையும் பாதிக்கும்.
மிதவேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமானது, சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் உதவியாக இருக்கும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. ஆனால் தற்போது பலர் இருக்கின்றனர். யு-19 அணியில் இருந்தே அவர்கள் உருவாகின்றனர்.
தென் ஆப்பிரிக்க பேட்டிங் பயிற்சியாளர் டேல் பென்கென்ஸ்டீன் கூறியதைப் போல, குறுகிய காலகட்டத்தில் யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் போன்றோரின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராக இயலவில்லை. அவர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசுகின்றனர்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் தேர்விலேயே தவறு ஏற்பட்டுள்ளது. டேவிட் மில்லர், டுமினி ஆகியோர் ஃபார்மில் இல்லை. இந்த நெருக்கடியால் அனுபவமில்லாத பேட்டிங் வரிசையானது சுழற்பந்துவீச்சுகளை எதிர்கொள்ளத் தடுமாறியது.
எய்டன் மார்க்ரம் கேப்டன் ஆகத் தகுதியானவர். ஆனால் அவர் இன்னும் அந்தப் பொறுப்புக்கு தயாராகவில்லை.
கோலி நிலையான பேட்ஸ்மேன் ஆன பிறகே அந்தப் பொறுப்புக்கு வந்தார். 2004-இல் நான் இந்தியா வந்தபோது பார்த்த இந்திய அணி தற்போது இல்லை.
தோனி மற்றும் கோலி போன்ற கேப்டன்கள் அதிக மாற்றங்களை அணியில் கொண்டு வந்துள்ளனர்" என்றார் அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.