உலக ஜூனியர் சர்கியூட்: இந்திய வீரர் மானவ் தக்காருக்கு வெள்ளிப் பதக்கம்...

Asianet News Tamil  
Published : Feb 06, 2018, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
உலக ஜூனியர் சர்கியூட்: இந்திய வீரர் மானவ் தக்காருக்கு வெள்ளிப் பதக்கம்...

சுருக்கம்

World Junior Circuit Silver medal for Indian veteran Manav Takar

ஐடிடிஎஃப் உலக ஜூனியர் சர்கியூட் இறுதிச்சுற்று டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்ஸம்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த மானவ் தக்காரும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் கனாக் ஜாவும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு செட்டையும் இருவரும் அடுத்தடுத்து கைப்பற்ற, வெற்றிக்கு இருவருக்கும் சமவாய்ப்பு நீடித்து வந்தது.

கனாக்கிற்கு டஃப் கொடுத்த மானவ் இறுதியில் 3-4(11-9, 3-11, 11-9, 6-11, 3-11, 11-9, 6-11) என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெள்ளி வென்றார்.

வெள்ளி வென்ற மானவ், 'கனாக் சிறப்பாக ஆடினார். இந்த ஆட்டம் சவால் நிறைந்த ஒன்றாக இருந்தது. எனினும், நான் செய்த சில தவறுகளை சாதகமாக்கிக் கொண்ட கனாக், அதை புள்ளிகளாக மாற்றி வெற்றி பெற்றார். இறுதிச்சுற்று வரை முன்னேறியதில் மகிழ்ச்சி' என்றார்.

முன்னதாக மானவ் தனது அரையிறுதியில் எகிப்தின் யூசஃப் அப்தெல் அஸிஸை 11-8, 11-8, 11-5, 11-8 என்ற நேர் செட்களில் வீழ்த்தியிருந்தார். அஸிஸ் தனது குரூப் சுற்றின்போது கனாக் ஜாவை வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ரஷியாவின் இவானின் டெனிஸை 11-3, 12-10, 11-9, 11-6 என்ற செட்களில் அமெரிக்காவின் தரவரிசைப்படுத்தப்படாத இளம் வீரர் வென்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஐபிஎல் 2026 தள்ளிப்போகிறதா? புதிய அட்டவணை என்ன?
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!