ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டிபோட இந்தியா டீம் ரெடி…

 
Published : Feb 15, 2017, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டிபோட இந்தியா டீம் ரெடி…

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியை, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி எதிர்கொள்கிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 23 முதல் 27-ஆம் தேதி வரை புணேவில் நடைபெறவுள்ளது.

இராண்டாவது போட்டி மார்ச் 4 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறவுள்ளது.

3-ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 16 முதல் 20-ஆம் தேதி வரை ராஞ்சியிலும், 4-ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 25 முதல் 29-ஆம் தேதி வரை தர்மசாலாவிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணியை, எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினர் நேற்று தேர்வு செய்தனர். இதன்படி, வங்கதேசத்தை வீழ்த்திய அதே அணி, ஆஸ்திரேலியாவுடன் களம் காண்கிறது.

முழங்கால் காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிராக ஆடும் வாய்ப்பை இழந்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சேர்க்கப்படவில்லை.

அவருக்குப் பதிலாக அந்தப் போட்டியில் விளையாடிய குல்தீப் யாதவ், இந்த 2 போட்டிகளிலும் தொடர்கிறார்.

முழங்கால் காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, அதிலிருந்து மீண்டு கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அவரது தந்தையின் மறைவு காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான அணியில் தேர்வாகி விளையாடாத போதிலும், தமிழக வீரரான அபினவ் முகுந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியிலும் இடம்பிடித்துள்ளார். விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பர் பணியைத் தொடர உள்ளார்.

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், கருண் நாயர், ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த், ஹார்திக் பாண்டியா.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?