
பார்வையற்றோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இந்திய அணிக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் அஜய் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பெற்றுள்ள வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், உங்களது பயிற்சியாளர் பேட்ரிக் ராஜ் குமாருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது இந்த வெற்றி, இந்திய தேசத்துக்கான பெருமையாகும். இந்திய அணியினரின் மன உறுதியின் வெளிப்பாடாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. உங்களது இந்த வெற்றி, விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களுக்கும், இதர மாற்றுத் திறனாளிகளுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கும்' என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.