அவங்களே இவ்வளவு பண்ணும்போது சும்மா இருப்பாரா நம்ம ஆளு..? ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவின் பதிலடி

By karthikeyan VFirst Published Feb 25, 2019, 5:12 PM IST
Highlights

உங்களுக்கு மட்டும்தான் சர்ப்ரைஸ் கொடுக்க தெரியுமா..? எங்களுக்குலாம் தெரியாதா என்கிற ரீதியில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுலை தவிர மற்ற யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. ராகுல் மட்டுமே 50 ரன்கள் அடித்தார். முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை குவித்த இந்திய அணி, கடைசி 10 ஓவர்களில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது. 

கடைசி வரை தோனி களத்தில் இருந்துமே ஒன்றுமே செய்யமுடியவில்லை. டெத் ஓவர்களை அபாரமாக வீசி இந்திய அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர் ஆஸ்திரேலிய பவுலர்கள். அதன் விளைவாக 20 ஓவர் முடிவில் வெறும் 126 ரன்களை மட்டுமே இந்திய அணி அடித்தது. 

127 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல்லும் ஷார்ட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினாலும், அந்த ஜோடியை பிரித்த பிறகு இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும் கடைசி ஓவரை உமேஷ் யாதவ் சரியாக வீசாததால் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச், இந்த போட்டியில் தொடக்கத்தில் இறங்காமல் யாரும் எதிர்பாராத வகையில், ஆல்ரவுண்டரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான மார்கஸ் ஸ்டோய்னிஸை தொடக்க வீரராக களமிறக்கினார். ஆஸ்திரேலிய அணி மார்கஸை தொடக்க வீரராக களமிறக்கி அதிர்ச்சியளிக்க, நம்ம கேப்டன் சும்மா இருப்பாரா..? வழக்கமாக பவர்பிளே முடிந்த பிறகு சாஹலை இறக்கும் கோலி, இந்த போட்டியில் இரண்டாவது ஓவரிலேயே சாஹலை பந்துவீச விட்டார். 
 

click me!