இளம் ஸ்பின்னர் அறிமுகம்.. தம்பி நீங்களும் இருக்கீங்க!! முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 24, 2019, 2:43 PM IST
Highlights

இரண்டு டி20 போட்டிகளும் அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.
 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இரண்டு டி20 போட்டிகளும் அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இதில் வென்று அதே உத்வேகத்துடன் உலக கோப்பைக்கு செல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அந்நிய மண்ணிலேயே வெற்றிகளை குவித்து வரும் வலுவான இந்திய அணியை, சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. 

இரு அணி வீரர்களுமே போட்டியில் வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் இந்த தொடரில் மயன்க் மார்கண்டே எடுக்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுலும் 15 வீரர்கள் கொண்ட அணியில் உள்ளனர். 

இன்று நடக்கும் முதல் போட்டியில் கோலி, ரோஹித், தவான், ரிஷப் பண்ட், தோனி, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா, பும்ரா ஆகியோர் அணியில் இருப்பர். சாஹல் அணியில் இருந்தாலும் மயன்க் மார்கண்டே இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாவதற்கான வாய்ப்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த சீசனில் ஆடிய மார்கண்டே சிறப்பாக பந்துவீசினார். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசிய மார்கண்டேவிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம். 

உலக கோப்பை அணிக்காக உமேஷ் யாதவை பரிசோதிக்கும் விதமாக இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக அவர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா, மார்கண்டே, பும்ரா, உமேஷ் யாதவ்.
 

click me!