அடுத்தடுத்த சதங்கள்.. செம ஃபார்மில் தெறிக்கவிடும் இஷான் கிஷான்!! வார்னர், பீட்டர்சனுடன் இணைந்த இளம் வீரர்

Published : Feb 24, 2019, 01:54 PM IST
அடுத்தடுத்த சதங்கள்.. செம ஃபார்மில் தெறிக்கவிடும் இஷான் கிஷான்!! வார்னர், பீட்டர்சனுடன் இணைந்த இளம் வீரர்

சுருக்கம்

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இஷான் கிஷான் அடுத்தடுத்து சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.  

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இஷான் கிஷான் அடுத்தடுத்து சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த இஷான் கிஷான், ஜார்கண்ட் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி செய்தார். 

இதையடுத்து மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியிலும் இஷான் கிஷான் அபாரமாக ஆடி சதமடித்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜார்கண்ட் அணியின் தொடக்க வீரர் ஆனந்த் சிங் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷான், அதிரடியாக ஆடினார். 

62 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 113 ரன்களை குவித்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய விராட் சிங் 73 ரன்களை குவித்தார். இவர்களின் அதிரடியால் ஜார்கண்ட் அணி 20 ஓவர் முடிவில் 219 ரன்களை குவித்தது. 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மணிப்பூர் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 98 ரன்களை மட்டுமே அடித்தது. இதையடுத்து ஜார்கண்ட் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் மணிப்பூர் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து சதமடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 2 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வார்னர், பீட்டர்சன், லூக் ரைட், ஹெண்டிரிக்ஸ், உன்முக்த் சந்த் ஆகியோருடன் இஷான் கிஷான் இணைந்துள்ளார். உன்முக்த் சந்திற்கு அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் இஷான் கிஷான் ஆவார்.
 

PREV
click me!

Recommended Stories

Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்...ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!