இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்!! கணிக்கப்பட்ட இந்திய அணி

By karthikeyan VFirst Published Sep 21, 2018, 10:08 AM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
 

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோதும். சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஹர்திக் பாண்டியா காயத்தால் தொடரை விட்டு வெளியேறியுள்ளதால் அவரது இடத்தில் கலீல் அகமது அல்லது தீபக் சாஹர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் அறிமுகமான கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

அதேபோல கடந்த இரண்டு போட்டிகளில் ஆடிய தினேஷ் கார்த்திக் இந்த போட்டியிலும் களமிறக்கப்படுவார் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார் தினேஷ் கார்த்திக்.

முஸ்தாபிசுரின் பவுலிங்கை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடினார் தினேஷ் கார்த்திக். முஸ்தாபிசுர் தான் வங்கதேச அணியின் முக்கியமான பவுலர். எனவே அவரது பவுலிங்கை தினேஷ் கார்த்திக் சரியாக ஆடுவார் என்பதால் கண்டிப்பாக இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் இருப்பார். 

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 270 ரன்களுக்கு மேல் எடுத்தால் போதும். வங்கதேசத்தை இலக்கை விரட்ட விடாமல் தடுத்துவிடலாம். அதேநேரத்தில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தாலும் முடிந்தளவிற்கு குறைந்த ரன்னில் சுருட்டினால் 6 பேட்ஸ்மேன்கள் அந்த இலக்கை எட்டுவதற்கு போதுமானதாக இருப்பார்கள். 

அந்த வகையில், 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற கலவையில் இன்று இந்திய அணி களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதர் ஜாதவும் நன்றாக பந்துவீசிவருகிறார். எனவே இந்திய அணிக்கு 6 பவுலிங் ஆப்ஷன் இருக்கும். 

கணிக்கப்பட்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல், கலீல் அகமது/தீபக் சாஹர்


 

click me!