
ஜப்பானில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஆர்.விஷ்ணுராம் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், சிறப்பாக செயல்பட்டதன் மூலம் விஷ்ணுராம் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலைநாடார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணுராம் பிறவியிலேயே வாய் பேசாதவர் மற்றும் செவிதிறன் குறைபாடு உடையவர். தமிழக அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தற்போது இவர் ஜப்பானில் நடக்கும் கூடைப்பந்து போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும், தங்கமகன் மாரியப்பனைப் போன்று, இந்திய அணீயினை வெற்றிக்கு உறுதியாக இருப்பார்.
மாணவர் விஷ்ணுராமை சக மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்களொடு நாமும் அவரைப் பாராட்டுவோம்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.