
57-வது தேசிய சீனியர் தடகளப் போட்டியில் ஆடவர் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
57-வது தேசிய சீனியர் தடகளப் போட்டி சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 3-வது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்தோஷ் குமார் 50.16 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
முன்னதாக 2009-ல் ஜோசப் ஆப்ரஹாம் 50.26 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.
சந்தோஷுக்கு அடுத்தபடியாக சர்வீசஸ் வீரர் ராமச்சந்திரன் 51.02 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளியும், உத்தரப் பிரதேச வீரர் ஆப்தாப் ஆலம் 51.33 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலமும் வென்றனர்.
ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சர்வீசஸ் வீரர் கணபதி 1 மணி, 27 நிமிடம், 33 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
இதே பிரிவில் மற்றொரு சர்வீசஸ் வீரரான சந்தீப் குமார் 1:28:30 கணக்கில் வெள்ளியும், அகில இந்திய காவல்துறை விளையாட்டு வாரியத்தைச் சேர்ந்த மணீஷ் ராவத் 1:28:34 கணக்கில் வெண்கலமும் வென்றனர்.
ஆடவர் உயரம் தாண்டுதலில் இரயில்வேயின் சித்தார்த் யாதவ், சர்வீசஸின் பாரதி ஆகியோர் 2.23 மீ. உயரம் தாண்டினர். இதன்மூலம் அவர்கள் இருவரும் புதிய போட்டி சாதனையை பதிவு செய்தனர்.
முன்னதாக கடந்த ஆண்டு தேஜஸ்வினி சங்கர் 2.22 மீ. உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது.
சித்தார்த் யாதவ், பாரதி ஆகிய இருவரும் 2.23 மீ. உயரம் தாண்டினாலும், டெக்னிக்கல் அடிப்படையில் சித்தார்த்துக்கு தங்கமும், பாரதிக்கு வெள்ளியும் கிடைத்தன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.