கங்குலி டீம்ல இருந்த 18 வயசு சின்ன பையன் அவன்.. என்னையவே வம்புக்கு இழுத்தான்!! ஸ்டீவ் வாக் பகிர்ந்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Nov 27, 2018, 11:52 AM IST
Highlights

கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அந்த தொடர் 1-1 என சமனானது. 

வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். 1999ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை அந்த அணி ஆடிய 16 டெஸ்ட் தொடர்களில் 15 டெஸ்ட் தொடர்களை வென்று கொடுத்த கேப்டன். இவரது தலைமையில் ஒருநாள் 1999ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையையும் ஆஸ்திரேலிய அணி வென்றது. 

மிகச்சிறந்த கேப்டன் மட்டுமல்லாமல் அபாரமான வீரரும் கூட. அனைத்து காலக்கட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரும், பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக திகழ்பவர். அப்படிப்பட்ட ஸ்டீவ் வாக்கையே அணியில் அறிமுகமான புதிதில் 18 வயதே ஆன பார்த்திவ் படேல் ஸ்லெட்ஜிங் செய்துள்ளார். அந்த சம்பவத்தை ஸ்டீவ் வாக் நினைவுகூர்ந்துள்ளார். 

கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அந்த தொடர் 1-1 என சமனானது. அந்த தொடர்தான் ஸ்டீவ் வாக்கிற்கு கடைசி தொடர். அத்துடன் ஸ்டீவ் வாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 

அந்த தொடரில் நடந்த ஒரு சம்பவத்தை ஸ்டீவ் வாக் நினைவுகூர்ந்துள்ளார். அந்த தொடரின் முதல் 3 போட்டிகள் முடிந்த நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. கடைசி போட்டி சிட்னியில் நடந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி நாளில் 443 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. 

அப்போது 5ம் வரிசையில் களமிறங்கிய ஸ்டீவ் வாக்கை அப்போதைய இளம் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் சீண்டியுள்ளார். பேட்டிங் கிரீஸில் நின்ற ஸ்டீவ் வாக்கை பார்த்து, எங்கே இப்போது நீங்கள் ஆடும் ஸ்லாக் ஸ்வீப்பை ஆடுங்கள் பார்ப்போம் என்று கூறியுள்ளார். 

அதற்கு ஸ்டீவ் வாக், தம்பி கொஞ்சம் மரியாதையா பேசு.. நான் என் முதல் டெஸ்ட் போட்டியை ஆடும்போது நீயெல்லாம் நாப்கின் போட்டுக்கொண்டு இருந்திருப்பாய்.. கொஞ்சம் மரியாதையா பேசு என்று பதிலடி கொடுத்திருப்பார். 

இதுகுறித்து பேசிய ஸ்டீவ் வாக், இதை ஸ்லெட்ஜிங் என்று கூறமுடியாது. ஆனால் பலருக்கு இது ஸ்லெட்ஜிங்காக தெரியும். என்னை பொறுத்தவரை அதை நான் வேடிக்கையாகத்தான் பார்த்தேன் என்று கூறியுள்ளார். 
 

click me!