ரோஹித் சர்மா - ஹனுமா விஹாரி.. 2 பேருல ஒருத்தருக்குத்தான் இடம்!! யாருக்கு தெரியுமா..?

By karthikeyan VFirst Published Nov 27, 2018, 10:47 AM IST
Highlights

இந்திய அணியில் முரளி விஜய் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் 1-1 என சமனானது. இதையடுத்து வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் மிக முக்கியமானது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

இந்திய அணியில் முரளி விஜய் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரும் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். 

முரளி விஜய் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடி நல்ல ரெக்கார்டுகளை வைத்துள்ளார். தற்போதைய சூழலில் தொடர்ந்து ராகுல் சொதப்பிவருவதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷா மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. மூன்றாம் வரிசையில் புஜாரா, நான்காவது இடத்தில் கேப்டன் கோலி, ஐந்தாம் வரிசையில் ரஹானே என்பது உறுதி. 

இதையடுத்து 6வது இடத்தில் ரோஹித் சர்மாவா, ஹனுமா விஹாரியா என்ற கேள்வி உள்ளது. ஹனுமா விஹாரி பவுலிங்கும் வீசுவார் என்பதால் அவர் களமிறக்கப்பட்டால் ஒரு ஸ்பின் ஆப்ஷன் கிடைக்கும். இந்த இடம் யாருக்கு என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், 6ம் வரிசையில் களமிறங்க என்னுடைய தேர்வு ஹனுமா விஹாரி தான். ஏனென்றால் கடைசியாக அவர் டெஸ்டில் அரைசதம் அடித்துள்ளார். பவுலிங்கும் வீசுகிறார். எனவே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்களுடன் செல்லும் இந்திய அணிக்கு மூன்றாவது ஸ்பின்னிங் ஆப்ஷனாக விஹாரி இருப்பார். அதனால் விஹாரிதான் என்னுடைய தேர்வு என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!