இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பெரிய அவருதான்!! ஸ்டீவ் வாக் புகழும் அந்த இந்திய வீரர் யார்..?

By karthikeyan VFirst Published Jan 4, 2019, 3:12 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் புஜாராவும் பவுலிங்கில் பும்ராவும் மிரட்டி வருகின்றனர். இந்திய அணி எப்போதுமே பேட்டிங்கில் சிறந்த அணியாகவே திகழ்ந்துள்ளது. அதனால் இந்திய அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணிக்கு, வரலாற்று வெற்றியை பதிவு செய்த அருமையான வாய்ப்புள்ளது. 

ஏற்கனவே 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்துவரும் இந்திய அணி, சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே இந்த தொடரை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைக்கப்போவது உறுதியாகிவிட்டது. 

இந்த தொடரில் பேட்டிங்கில் புஜாராவும் பவுலிங்கில் பும்ராவும் மிரட்டி வருகின்றனர். இந்திய அணி எப்போதுமே பேட்டிங்கில் சிறந்த அணியாகவே திகழ்ந்துள்ளது. அதனால் இந்திய அணி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அதேநேரத்தில் முன்னெப்போதையும் விட வலுவான பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றிருப்பதுதான், இந்திய அணி தொடரில் ஆதிக்கம் செலுத்துவதற்கு காரணம். 

அதிலும் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் தொடரில் அறிமுகமான பும்ரா, கடந்த ஆண்டில் மட்டும் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் 20 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக திகழ்கிறார். விக்கெட்டுகள் வீழ்த்துவது மட்டுமல்லாது, பவுலிங் வேரியேஷனிலும் வேகத்திலும் பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸின் மண்டையை இரண்டு முறை பதம் பார்த்து, ஹெல்மெட்டில் விரிசல் விழவைத்துள்ளார். அவரது பவுன்ஸரையும் பவுலிங்கையும் எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் திணறுகின்றனர். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 20 விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா முக்கிய காரணமாக திகழ்கிறார். 

ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி வெல்ல உள்ள நிலையில், இந்த தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக பும்ரா தான் திகழ்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டீவ் வாக், பும்ரா தான் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசம். அவர்தான் ஆட்டத்தில் அவ்வப்போது திருப்புமுனைகளை ஏற்படுத்தி இந்திய அணிக்கு உதவுகிறார். தற்போதைய இந்திய அணியின் பவுலிங் யூனிட் மிகச்சிறப்பாக உள்ளது என ஸ்டீவ் வாக் புகழ்ந்து பேசியுள்ளார். 
 

click me!