இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Jan 4, 2019, 1:40 PM IST
Highlights

டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. ஜனவரி 12, 15, 18 ஆகிய மூன்று நாட்கள் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணிக்கு, வரலாற்று வெற்றியை பதிவு செய்த அருமையான வாய்ப்புள்ளது. 

ஏற்கனவே 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்துவரும் இந்திய அணி, சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே இந்த தொடரை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைக்கப்போவது உறுதியாகிவிட்டது. 

டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. ஜனவரி 12, 15, 18 ஆகிய மூன்று நாட்கள் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆஸ்திரேலியாவும் ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. 

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஜேசன் பெரெண்டோர்ஃப், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், நாத்ன் லயன், ரிச்சர்ட்ஸன், பீட்டர் சிடில், ஸ்டேன்லேக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சாஹல், கலீல் அகமது, பும்ரா, ஷமி. 
 

click me!