ஜெய்ப்பூர் மைதானத்துல பட்லர் செய்தது சாதாரண காரியம் இல்ல.. சிஎஸ்கே பயிற்சியாளர் புகழாரம்

First Published May 12, 2018, 2:50 PM IST
Highlights
stephen fleming praised jos buttler batting


பேட்டிங் செய்ய கடினமான ஜெய்ப்பூர் மைதானத்தில் ஒரு இன்னிங்ஸ் முழுவதும் பட்லர் பேட்டிங் செய்தது மிகவும் சிறப்பானது சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடந்த சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 95 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், எந்த நேரத்திலும் அபாயகரமான பேட்டிங் செய்யக்கூடிய பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் வீழ்த்த திட்டங்கள் வைத்திருந்தோம். ஸ்டோக்ஸை வீழ்த்திவிட்டோம். ஆனால் பட்லரை வீழ்த்த முடியவில்லை. எங்கள் அணி பவுலர்கள் சிறப்பாகவே பந்துவீசினர். ஆனால் பட்லர் அதிகநேரம் களத்தில் நின்றுவிட்டதால் பவுலர்களுக்கு ஒருவித நெருக்கடி உருவாயிற்று. பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத ஜெய்ப்பூர் மைதானத்தில் ஒரு இன்னிங்ஸ் முழுவதும் பட்லர் பேட்டிங் செய்தது சிறப்பானது. எங்களது ஆட்டம் திருப்தியளிக்கிறது. ஆனால் பட்லரின் பேட்டிங் தான் போட்டியின் போக்கையே மாற்றிவிட்டது. 
 

click me!