மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்து: ஆடவரில் திருநெல்வேலி, மகளிரில் சென்னை அணி சாம்பியன்…

Asianet News Tamil  
Published : Jun 19, 2017, 09:18 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்து: ஆடவரில் திருநெல்வேலி, மகளிரில் சென்னை அணி சாம்பியன்…

சுருக்கம்

State level Junior Basketball Tirunelveli Team for men Chennai team for Women

மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்துப் போட்டியின் ஆடவர் பிரிவில் திருநெல்வேலி அணியும், மகளிர் பிரிவில் சென்னை 1 மண்டல அணியும் சாம்பியன் வென்றன.

மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்துப் போட்டி ஜூன் 14-ஆம் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் தொடங்கின.

கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில், ஆடவர் அரையிறுதியில் திருநெல்வேலி அணியும், சென்னை 2 மண்டல அணியும் மோதியதில் 82-71 என்ற புள்ளிக் கணக்கில் திருநெல்வேலி அணி வென்றது.

அதேபோன்று திருவள்ளூர் மாவட்ட அணி 56-45 என்ற புள்ளிக் கணக்கில் மதுரை மாவட்ட அணியையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.

பின்னர், நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திருநெல்வேலி அணி 87-85 என்ற புள்ளிக் கணக்கில் திருவள்ளூர் மாவட்ட அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

ஆடவர் பிரிவில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மதுரை மாவட்ட அணி 74-59 புள்ளிக் கணக்கில் சென்னை 2 மண்டல அணியை வீழ்த்தியது.

அதேபோன்றுமகளிருக்கான அரையிறுதியில் சென்னை 2 மண்டல அணி 71-62 என்ற புள்ளிக் கணக்கில் தஞ்சை அணியையும், சென்னை 1 மண்டல அணி 63-59 என்ற புள்ளிக் கணக்கில் நாகை அணியையும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

இறுதி ஆட்டத்தில் சென்னை 1 மண்டல அணி 64-55 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை 2 மண்டல அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் நாகை அணி 58-28 என்ற புள்ளிக் கணக்கில் தஞ்சை அணியை வீழ்த்தியது.

வெற்ரிப் பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எல்லை மீறி போறீங்க டா.. RCBக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டிய CSK..! BCCIயிடம் முறையீடு..
CSK Replacement: கலீல் அவுட், CSK-க்கு அடுத்தது யார்? இந்த 3 பௌலர்கள் தான் லிஸ்ட்ல இருக்காங்க!