
அகில இந்திய துறைமுக அணிகளிடையே கூடைப்பந்து போட்டி, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நாளைத் தொடங்குகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுப்பாட்டுக் குழு, தூத்துக்குடி வஉசி துறைமுக விளையாட்டுக் குழு ஆகியவை சார்பில், அகில இந்திய பெரிய
துறைமுக அணிகளிடையே கூடைப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.
இப்போட்டியில் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, தூத்துக்குடி ஆகிய நான்கு பெரிய துறைமுகங்களின் அணியினர் பங்கேற்கின்றனர்.
தூத்துக்குடி வஉசி துறைமுக கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில், துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் சு. நடராஜன் போட்டியை தொடங்கிவைக்கிறார்.
22-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், வெற்றி பெறும் அணிகளுக்கு துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் பரிசுகளை வழங்குகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.