
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதை அடுத்து அவருக்குப் பதிலாக பேட் கம்மின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய ஸ்டார்க்கின் வலது கால் எழும்பில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய முடநீக்கியல் நிபுணர் டேவிட் பீக்லே கூறியது:
"பெங்களூரில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது மிட்செல் ஸ்டார்க்கின் வலது காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருடைய வலது கால் எழும்புப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அவர் நாடு திரும்புகிறார்' என்றார்.
ஏற்கெனவே மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகிய நிலையில், இப்போது மிட்செல் ஸ்டார்க்கும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், "ஸ்டார்க்கின் விலகல், ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அது நிச்சயமாக ஆஸ்திரேலியாவின் வெற்றியைப் பாதிக்கும்' என்றார்.
இந்நிலையில் ஸ்டார்க்குக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.