
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடரின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
கடந்த இரண்டு முறையும் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, இந்த முறை டாஸ் வென்றார். டாஸ் வென்ற ரோஹித், முதலில் இலங்கையை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களான குணதிலகாவும் தரங்காவும் ஆடிவருகின்றனர். 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி 19 ரன்கள் எடுத்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.