
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் ரூ.16 ஆயிரத்து 347 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி தெரிவித்தார்.
புதிய அட்டவணையை ராகுல் ஜோரி தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பிறகு, புதிய பட்டியல் அமலுக்கு வரும்.
பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"இந்திய அணி அடுத்த ஐந்து வருடங்களில் உள்ளூரில் மட்டும் 27 டி-20 போட்டிகள் உள்பட 81 போட்டிகளில் விளையாடும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுளளது. மேலும், 26 டி20 போட்டிகள் வெளிநாடுகளில் நடைபெறும். டி-20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த காலகட்டத்தில் 37 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட வழிவகை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 19 டெஸ்ட் உள்ளூரிலும், 18 டெஸ்ட் போட்டிகள் வெளிநாடுகளிலும் நடைபெறும்.
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் ஏறக்குறைய பாதிப் போட்டிகள் நடைபெறும்.
அடுத்த வருடம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியுடன் ரூ.16 ஆயிரத்து 347 கோடி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது, எந்த சர்வதேச போட்டிகளிலும் இந்தியா பங்கேற்காத வகையில் புதிய போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது" என்று வர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.