சாஹல், குல்தீப்பின் சுழலில் சுருண்டது இலங்கை..! 215 ரன்களுக்கு ஆல் அவுட்... இந்தியாவிற்கு எளிய இலக்கு..!

First Published Dec 17, 2017, 5:08 PM IST
Highlights
srilanka all out for 215 runs and easy target for india


அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி, 215 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமமாக உள்ள நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது.

கடந்த இரண்டு முறையும் டாஸ் தோற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த முறை டாஸை வென்று இலங்கையை பேட்டிங் செய்ய பணித்தார்.

தொடக்கத்தில், 15 ரன்களுக்கே முதல் விக்கெட்டை இலங்கை அணி இழந்தபோதிலும், தரங்கா மற்றும் சமரவிக்ரமா ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் ஸ்கோர் 136ஆக இருந்தபோது சமரவிக்ரமா வெளியேறினார். 

அதிரடியாக ஆடி 95 ரன்களை குவித்த தரங்கா சதமடிக்கும் முன்னரே, குல்தீப் யாதவின் சுழலில் வீழ்ந்தார். 160 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது இலங்கை அணி. ஆனால், அதன் பின்னர் வந்த இலங்கை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் அவுட்டாக, அந்த அணி 44.5 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியின் தரப்பி, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி, 216 என்ற எளிய இலக்குடன் களமிறங்குகிறது.

click me!