
ஜெர்மன் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஜெர்மனியின் முல்ஹெய்ம் அன் டெர் ரூர் நகரில் நடைபெற்று வரும் ஜெர்மன் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் ஸ்ரீகாந்த் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 19-21, 20-22 என்ற நேர் செட்களில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
மற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சுபங்கர் தேய் 14-21, 8-21 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் லாங் ஆங்கஸிடம் தோல்வி கண்டார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்ஷித் அகர்வால் 15-21, 11-21 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹூ யூனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.