
சர்வதேச பாட்மிண்டன் ஒற்றையர் தரவரிசையில் எட்டாவது இடத்தைப் பிடித்த ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்தியர்.
இந்தோனேஷிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றில் தொடர்ந்துது வெற்றிகளைக் குவித்ததன் மூலம் ஸ்ரீகாந்த மூன்று இடங்கள் முன்னேறி 58 ஆயிரத்து 583 புள்ளிகளுடன் எட்டாவது இடத்துக்கு வந்துள்ளார்.
சர்வதேச தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்தியர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மற்றொரு இந்தியரான சாய் பிரணீத் ஓரிடம் முன்னேறி 15-ஆவது இடத்திற்கு வந்துள்ளார்.
அஜய் ஜெயராம் ஓரிடம் சரிவைக் கண்டு 16-ஆவது இடத்திலும், ஹெச்.எஸ்.பிரணாய் 2 இடங்கள் கீழிறங்கி 23-ஆவது இடத்திலும் இருக்கிறார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பி.வி.சிந்து ஓரிடம் பின்தங்கி 5-ஆவது இடத்துக்கும், சாய்னா நெவால் ஓரிடம் முன்னேற்றம் கண்டு 15-ஆவது இடத்துக்கும் வந்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.