37 வயசு ஆயிடுச்சு.. அதிரடியாக ஓய்வை அறிவித்த வீரர்

By karthikeyan VFirst Published Jan 10, 2019, 10:45 AM IST
Highlights

2006ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மோர்கல், அந்த ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. 

தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கல். 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆல்பி மோர்கல், 2012ம் ஆண்டுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 58 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 2006ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மோர்கல், அந்த ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. 

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடிய நல்ல ஆல்ரவுண்டரான ஆல்பி மோர்கல், 2012ம் ஆண்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணியில் ஆடவில்லை. இந்நிலையில், தற்போது அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். 

ஆல்பி மோர்கல், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 ஆண்டுகள் ஆடியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை 6 சீசன்கள் சென்னை அணியில் ஆடியுள்ளார். அதன்பிறகு சென்னை அணியால் கழட்டிவிடப்பட்ட மோர்கல், 2014ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காகவும் 2015ம் ஆண்டு சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் 2016ம் ஆண்டில் புனே அணிக்காகவும் ஆடினார். அதன்பிறகு ஐபிஎல்லில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டின் மத்தியில் ஓய்வு அறிவித்த நிலையில், ஆல்பி மோர்கலும் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார். ஆல்பி மோர்கல், கடந்த சில ஆண்டுகளாகவே தென்னாப்பிரிக்க அணியில் ஆடவில்லை என்பதால் அவரது ஓய்வு அறிவிப்பு அந்த அணிக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த ஆண்டு உலக கோப்பை நடக்க உள்ள நிலையில் கடந்த ஆண்டு டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தது தான் அந்த அணிக்கு பெரிய பாதிப்பு. 

click me!