இரண்டாவது டெஸ்ட்.. மீண்டும் தென்னாப்பிரிக்கா ஃபர்ஸ்ட் பேட்டிங்..!

Asianet News Tamil  
Published : Jan 13, 2018, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
இரண்டாவது டெஸ்ட்.. மீண்டும் தென்னாப்பிரிக்கா ஃபர்ஸ்ட் பேட்டிங்..!

சுருக்கம்

south africa first batting in second test match

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய தொடர்களில் விளையாடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.

கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்தனர். ஆனால், பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், தோல்வியடைந்தோம். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 400 ரன்களைக் கூட இந்திய அணி எடுக்கவில்லை. 

208 என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில், நடந்து வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கியது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான எல்கர், மார்க்ரம் ஆகியோர் ஆடி வருகின்றனர். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிகர் தவனுக்கு பதிலாக லோகேஷ் ராகுலும், விக்கெட் கீப்பர் சஹாவுக்கு பதிலாக பார்திவ் படேலும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
WI vs SA T20 World Cup 2026: Wi, SA போட்டியில் கவனம் செலுத்தும் இந்தியர்கள்..! சாதிக்கப்போவது யார்?