
உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தனது 2-ஆவது ஆட்டத்தில் தோல்வி கண்டார்.
துபையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜப்பானின் அஹானே யமாகுசியை வீழ்த்திய சிந்து, வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் சீனாவின் சன் யூவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய சன் யூ 21-15, 21-17 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்துவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. சிந்து தனது 3-ஆவது ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்கிறார். இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.