படுதோல்விக்கு பிறகும் மாலிக்குடன் சேர்ந்து குலுங்கி குலுங்கி சிரித்த கோலி, யுவராஜ்!! காரணம் இதுதான்

By karthikeyan VFirst Published Oct 18, 2018, 2:19 PM IST
Highlights

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக்குடன் சேர்ந்து இந்திய வீரர்கள் கோலி, யுவராஜ் ஆகியோர் சேர்ந்து பயங்கரமாக சிரித்தனர். அதற்கான காரணத்தை ஷோயப் மாலிக் தெரிவித்துள்ளார். 
 

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக்குடன் சேர்ந்து இந்திய வீரர்கள் கோலி, யுவராஜ் ஆகியோர் சேர்ந்து பயங்கரமாக சிரித்தனர். அதற்கான காரணத்தை ஷோயப் மாலிக் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. இறுதி போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

இந்த போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக் எதையோ கூற, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சீனியர் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் பயங்கரமாக சிரித்தனர். மாலிக், கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் உரையாடி சிரித்துக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

எதிரணியாக மட்டுமல்லாது பரஸ்பரம் எதிரி அணியாகவும் பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பேசி சிரித்துக்கொண்டிருந்த வீடியோ, அப்போதே ஐசிசி டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி, இதுதான் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்று பதிவிடப்பட்டிருந்தது. 

pic.twitter.com/G2wAmKkmxO

— ICC (@ICC)

இந்நிலையில் ஓராண்டிற்கு பிறகு, அந்த சிரிப்பலைக்கு என்ன காரணம் என்பதை ஷோயப் மாலிக் பகிர்ந்துள்ளார். ஒரு பேட்டியில் இதுகுறித்து ஷோயப் மாலிக் மனம் திறந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய மாலிக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெய்ல் எங்கள் பந்து வீச்சை அடித்து நொறுக்கி கொண்டிருந்தார். அப்போது கெய்லுக்கு ஒரு கேட்ச் விடப்பட்டது. அந்த நேரத்தில் சயீத் அஜ்மல் கேட்ச் எடுக்கும் நிலையில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் கடைசி நொடியில் பந்திலிருந்து விலகினார். ஏன் கேட்ச் எடுக்கக் கூடிய நிலையில் திடீரென விலகினாய் என்று நான் அஜ்மலிடம் கேட்டேன். அதற்கு அவர், நான் கேட்சை விட்டால் அவர் பிடிக்கலாம் என்று குனிந்தபடி காத்திருந்ததாகத் தெரிவித்தார். கெய்லுக்கு கேட்ச் விட்ட இந்தச் சம்பவத்தை பற்றித்தான் பேசி சிரித்துக்கொண்டிருந்தோம் என ஷோயப் மாலிக் தெரிவித்துள்ளார். 
 

click me!