எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கும்போது இவரா பயிற்சியாளர்? அவர மாத்துனா எல்லாமே தானா மாறும்.. தெறிக்கவிட்ட ஷேன் வார்னே

By karthikeyan VFirst Published Nov 22, 2018, 3:12 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் கிரேம் ஹிக்கை மாற்ற வேண்டும் என முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே வலியுறுத்தியுள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் கிரேம் ஹிக்கை மாற்ற வேண்டும் என முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே வலியுறுத்தியுள்ளார். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 

வலுவான இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்று தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழும் முனைப்பில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. 

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அனைத்து வகையிலும் சீரழிந்திருக்கிறது. எனவே அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள விரைவில் ஏதாவது செய்ய வேண்டும். போட்டியின் சூழலை அறியாமல் தவறான ஷாட்களை தேர்வு செய்து ஆடுவதாக ஏற்கனவே ஷேன் வார்னே வேதனை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்னே, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் கடந்த 25-30 ஆண்டுகளாக மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருந்துள்ளனர். எனவே அவர்களில் ஒருவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கலாம். கிரேம் ஹிக் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராக இருந்துவருகிறார். ஆனால் இவரது பயிற்சியின் கீழ் பேட்ஸ்மேன்கள் செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கின்றனர். 

எனவே பேட்டிங் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய தருணம் இது. மார்க் வாக், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், மைக் ஹசி ஆகியோரில் ஒருவர் கண்டிப்பாக பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும். பவுலிங்கிலும் மெக்ராத் போன்ற சிறந்த வீரர்கள் நம்மிடம் உள்ளனர். அவர்களை பயன்படுத்த வேண்டும் என்று ஷேன் வார்னே அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!