ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அடக்கி பிரேக் கொடுத்த ஷமி!! ஃபின்ச்சின் கையை உடச்சது போதாதுனு ஷமி செய்த அடுத்த சம்பவம்

Published : Dec 17, 2018, 10:58 AM IST
ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அடக்கி பிரேக் கொடுத்த ஷமி!! ஃபின்ச்சின் கையை உடச்சது போதாதுனு ஷமி செய்த அடுத்த சம்பவம்

சுருக்கம்

இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவந்த கவாஜா - டிம் பெய்ன் ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி.  

இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவந்த கவாஜா - டிம் பெய்ன் ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதம் மற்றும் ரஹானேவின் பொறுப்பான அரைசதத்தால் 283 ரன்கள் சேர்த்தது. 

43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். ஷமியின் பந்துவீச்சில் கையில் காயமடைந்து ஃபின்ச் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஷான் மார்ஷை 5 ரன்களில் ஷமி அவுட்டாக்கினார். அதன்பிறகு பெரிய பார்ட்னர்ஷிப் எதையும் அமைக்கவிடாத இந்திய பவுலர்கள், மார்கஸ் ஹாரிஸ், ஹேண்ட்ஸ்கம்ப் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை அவுட்டாக்கி அனுப்பினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த கவாஜாவுடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை பறிகொடுத்து விடாமல் மூன்றாம் நாளை முடித்தது. நேற்றைய மூன்றாம் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்திலும் கவாஜா - டிம் பெய்ன் ஜோடி உணவு இடைவேளை வரை ஆடியது. உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்திருந்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். எனினும் உணவு இடைவேளைக்கு பிறகு டிம் பெய்னின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷமி. இதற்கடுத்து, நேற்று ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிப்போன ஃபின்ச் களத்திற்கு வந்தார். அவரை வந்த முதல் பந்திலேயே அவுட்டாக்கி அனுப்பினார் ஷமி. 

நேற்று ஃபின்ச்சின் கையை உடைத்த ஷமி, இன்று அவரது விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. உஸ்மான் கவாஜா மட்டும் களத்தில் நங்கூரம் போட்டு சதத்தை நோக்கி ஆடிவருகிறார். 
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: தோனியுடன் ரகசிய சந்திப்பா? மும்பையை விட்டு சென்னைக்கு வரும் ஹர்திக் பாண்டியா!
Abhishek Sharma: சரவெடியாக வெடித்து சிதறிய அபிஷேக்..! 91 பந்துகளில் 25 சிக்சர், 233 ரன்கள் குவிப்பு