தம்பி  இனி என்னை அப்படி கூப்பிடாதப்பா… பந்து வீச்சாளரை செல்லமா கதறவிட்ட தல டோனி….

Asianet News Tamil  
Published : Jun 03, 2018, 07:45 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
தம்பி  இனி என்னை  அப்படி கூப்பிடாதப்பா… பந்து வீச்சாளரை செல்லமா கதறவிட்ட தல டோனி….

சுருக்கம்

shahal told about dhoni charecter to press people

தன்னை சார் என அழைக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பௌலர் சஹாலை மகேந்திர சிங் டோனி செல்லமாக மிரட்டியுள்ளார்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் மற்றும்  குல்தீப் யாதவ் ஆகியோர் கடந்த 2016-ம்  ஆண்டு  நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது சுழற்பந்துவீச்சு எதிரணிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக மாறியுள்ளனர். 

இந்நிலையில், ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  சஹால், டோனியுடன் பழகிய சுவராஸ்யமான அனுபவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது கடந்த 2016-ம் ஆண்டு, ஜிம்பாப்பே அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வாகி இருந்தேன். டோனி தான் எனக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புக் கொடுத்தார். அவருடன் முதல்முறையாக இணைந்து விளையாடுவதை எண்ணி மகிழ்ச்சியாகவும், பயமாகவும் இருந்தது என தெரிவித்தார்.

இதனால், டோனிக்கு எதிராக நின்று பேசுவதற்குக்கூட நான் பயந்தேன். எப்போதாவது அவருடன் பேச நேர்ந்தால், ‘டோனி சார்’ என்றுதான் அழைப்பேன். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகள் அனைத்திலும் டோனியை ‘டோனி சார்’ என்றே அழைத்தேன். 

இதைத் தொடர்ந்து ஒருநாள் என்னிடம் பேசிய டோனி, நீ என்னை மகி, டோனி, மகேந்திர சிங் டோனி, அல்லது பாய் (அண்ணா) என எப்படி வேண்டுமோ அப்படிக் கூப்பிடு, ஆனால், தயவு செய்து சார் என்று மட்டும் கூப்பிடாதே என்று செல்லமாக மிரட்டியதாக தெரிவித்தார்.

இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரிப்பதை பார்த்து டோனியும் சிரித்தார். அன்றுமுதல் டோனியை நான் மகி பாய் அதாவது மகி அண்ணா என்றுதான்  அழைத்து வருவதாக சஹால் தெரிவித்தார்.

யாரிடமும் எந்த எதிர்பார்ப்புகம் இல்லாமல் இருப்பதோடு, கிரிக்கெட் வீரர்கள் அனைவரிடமும் சகோதர பாசத்தோடு பழகுவதிலும், கிரிக்கெட்  தொடர்பான டிப்ஸ்கள் வழங்குவதிலும் டோனியை மிஞ்ச ஒரு ஆள் பிறந்து வரவேண்டும் என்று சஹால் பெருமையாக பேசினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!