
ஆல் ரௌண்டர் விஜய் சங்கர் தலைமையில் செய்யது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்யது முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தில் ஜனவரி 8 - 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான தமிழக அணியை இரண்டு பயிற்சிப் போட்டிகளின் மூலமாக தேர்வு செய்துள்ளது மாநில தேர்வுக் குழு.
தமிழக அணிக்கு தலைமை தாங்குகிறார் விஜய் சங்கர். இவர், சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமான வாஷிங்டன் சுந்தரும் இந்த அணியில் இருக்கிறார்.
அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அணி:
விஜய் சங்கர் (கேப்டன்), அபராஜித் (துணை கேப்டன்), பரத் சங்கர், வாஷிங்டன் சுந்தர், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், ரஹீல் ஷா, சாய் கிஷோர், முகமது, விக்னேஷ், சஞ்சய் யாதவ், அனிருத்தா, அந்தோனி தாஸ், ரோஹித் ராமலிங்கம், எம்.அஸ்வின்.
செய்யது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் தமிழக அணி, விசாகப்பட்டினத்தில் நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் ஆந்திர பிரதேச அணியை சந்திக்கிறது என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.