
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த குஷ் பகத் (7) என்ற சிறுவனுக்கு "கேன்டிடேட் மாஸ்டர்' பட்டம் வழங்கி உலக செஸ் சம்மேளனம் கெளரவித்துள்ளது.
உலக செஸ் சம்மேளனமான "ஃபிடே' நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
“குஷ் பகத், கடந்த 6 மாதங்களில் பல்வேறு செஸ் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
7 வயதுக்கு உள்பட்டோருக்கான மகாராஷ்டிர மாநில சாம்பியன்ஷிப் – 2016 போட்டியில் வெற்றி வாகை சூடிய பகத், ரஷியாவின் சோச்சியில் நடைபெற்ற 7 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக பள்ளிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.
அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்றார்.
அந்தப் போட்டியில் அவரது சிறப்பான செயல்பாட்டுக்காக அவருக்கு கேன்டிடேட் மாஸ்ட்ர் பட்டம் வழங்கி ஃபிடே கெளரவிக்கிறது” என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குஷ் பகத்தின் பயிற்சியாளர் கூறுகையில், "இந்தப் பட்டத்துக்கு குஷ் பகத் தகுதியானவர். அவருக்கு இருக்கும் திறமையால் எதிர்வரும் காலத்தில் பல வெற்றிகளை அவர் பதிவு செய்வார்' என்றுத் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.