டென்னிஸ்க்கு செரீனா வில்லியம்ஸ் முழுக்கா? பகீர் காரணங்கள்… கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமா?

Asianet News Tamil  
Published : Apr 20, 2017, 05:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
டென்னிஸ்க்கு செரீனா வில்லியம்ஸ் முழுக்கா? பகீர் காரணங்கள்… கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமா?

சுருக்கம்

serena williams quits tennis

அமெரிக்க வீராங்கனையும், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான செரீனா வில்லியம்ஸ்(வயது35) அடுத்த ஓர் ஆண்டுக்கு டென்னிஸ் விளையாடமாட்டர் அல்லது டென்னிஸ் போட்டிக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார் என்று வரும் செய்திகள்  அவரின் ரசிகர்களுக்கு தலையில் இடி விழும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இதற்கான காரணம் செரீனா வில்லியம்ஸ் தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளதால், அடுத்த ஓர் ஆண்டுக்கு அவர் டென்னிஸ் விளையாட்டமாட்டார் எனத் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் கோடீஸ்வரர் அலெக்ஸ் ஓஹேனியனுக்கும் செரீனாவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் முடிவதற்குள் செரீனா கர்ப்பமாகியுள்ளார்.

அடுத்தவாரம் வெளியாக உள்ள சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் செரீனா மீண்டும் நம்பர் ஒன் இடத்தைபிடிக்க இருக்கும் நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, அடுத்த 20 வாரங்களுக்கு இவர் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், டென்னிஸ் விளையாட்டை ஓர் ஆண்டுக்கு மேற்கொள்ள முடியாது என செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்தஜனவரி மாதம் நடந்து முடிந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், தனது 23-வது கிராண்ஸ்ட்லாம் பட்டத்தை வென்று ஸ்டெபிகிராபின் சாதனையை செரீனா முறியடித்தார். இந்நிலையில், அடுத்துவரும் கிராண்ட்ஸ்லாம்களான விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், யு.எஸ். ஓபன் ஆகியவற்றில் செரீனாவின் ஆக்ரோஷ ஆட்டத்தையும், புயல்வேக சர்வீஸ்களையும், ஏஸ்களையும் பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சிதரும் விஷயமாகும்.

செரினா கர்ப்பமாக இருக்கும் செய்தியை சர்வதேச டென்னிஸ் அமைப்பும் உறுதி செய்து, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. செரீனா, ஓஹேனியனுக்கு குழந்தை பிறக்க இருக்கும் இனிப்பான செய்தியை அறிந்தோம். வாழ்த்துக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், கிம் கிளைஸ்டர்க், ஆஸ்திரேலிய வீராங்கனை இவானே குலேகாங், மார்க்ரெட் கோர்ட், பெலாரஸ் வீராங்கனை அசரென்கா ஆகியோர் திருமணம்செய்துகுழந்தை பெற்றபின் டென்னிஸ் விளையாட்டுக்கு திரும்பி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள். ஆதலால், செரீனாவும் குழந்தை பேற்றுக்கு பின்டென்னிஸ் விளையாட்டுக்கு திரும்புவார் என நம்பலாம்.

அதேசமயம், ஸ்டெபிகிராப், மோனிகா செலஸ் உள்ளிட்ட புகழின் உச்சத்தில் இருந்த வீராங்கனைகள் திருமணம் செய்தவுடன் டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட்டனர்் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

அதுமட்டுமல்லாமல், இப்போது செரீனாவுக்கு 35 வயதாகிறது, குழந்தை பேற்றுக்கு பின் டென்னிஸ் வாழ்க்கையை தொடர்வார் என்பது பெரிய கேள்விக்குரியாகவும் அமைந்துள்ளது.

எப்படியோ, சாமி திரைப்படத்தில் வரும் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது… கல்யானந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா….பெத்துக்கிட்டு தாலியத்தான் கட்டிக்கலாமா…

செரீனா வாழ்க்கைக்கு இது சரியாகப் பொருந்துகிறது..

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

மகுடம் சூடா மன்னன்: 9000 ரன்களை கடந்த முதல் வீரர் - IPL வரலாற்றில் விராட் கோலி புதிய சகாப்தம்..!
அவுட்டான கடுப்பில் மைதானப் பொருட்களை சேதப்படுத்திய கே.கே.ஆர் வீரர்.. செக் வைத்த பிசிசிஐ!