மொத்த டீமும் ஒருத்தர பற்றி மட்டும்தான் பேசுச்சு!! அவர் பாகிஸ்தானின் சச்சின் டெண்டுல்கர் .. சேவாக் புகழாரம் சூட்டியது யாருக்கு..?

By karthikeyan VFirst Published Oct 8, 2018, 5:14 PM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் சச்சின் டெண்டுல்கர் என சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். 
 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் சச்சின் டெண்டுல்கர் என சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். 1996ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணியில் ஆடிவரும் அஃப்ரிடி, கடந்த மே மாதம் தனது கடைசி சர்வதேச போட்டியில் ஆடினார். 22 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக அஃப்ரிடி ஆடியுள்ளார். 

தனது அதிரடியான பேட்டிங்கால் பூம் பூம் அஃப்ரிடி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 27 டெஸ்ட் போட்டிகளிலும் 398 ஒருநாள் போட்டிகளிலும் அஃப்ரிடி ஆடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் என்ற இவரது சாதனையை நீண்ட இடைவெளிக்கு பிறகு கோரி ஆண்டர்சன் முறியடித்தார். 

பாகிஸ்தான் அணியின் அதிக அனுபவம் வாய்ந்த வீரரான அஃப்ரிடி, மூன்று தலைமுறை வீரர்களுடன் ஆடியுள்ளார். இந்நிலையில், அஃப்ரிடி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், நான் இந்திய அணியில் சேர்ந்த பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான முதல் தொடர் அது. அப்போது இந்திய வீரர் ஒவ்வொருவரும் அஃப்ரிடியை பற்றித்தான் பேசினர். ஒரு கிரிக்கெட் வீரராக அவர், பாகிஸ்தான் அணியின் சச்சின் டெண்டுல்கர். நாங்கள் அனைவருமே அவரை சமாளிப்பது குறித்துத்தான் விவாதித்துக் கொண்டிருந்தோம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!