ஆஸ்திரேலியாவை அடித்து துவைக்கும் பாகிஸ்தான்!! விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறும் ஆஸி., பவுலர்கள்

By karthikeyan VFirst Published Oct 8, 2018, 4:07 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிவரும் பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்களை கடந்து ஆடிவருகிறது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிவரும் பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்களை கடந்து ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடுகின்றன. 

இதில் முதல் டெஸ்ட் போட்டி துபாயில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் முகமது ஹஃபீஸ் மற்றும் இமாம் உல் ஹக் அபாரமாக ஆடி சிறந்த தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்தனர். இமாம் உல் ஹக் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹஃபீஸுடன் இணைந்த அசார் அலி வெறும் 18 ரன்களிலும் முகமது அப்பாஸ் ஒரு ரன்னிலும் வெளியேறினர். சிறப்பாக ஆடி சதமடித்த முகமது ஹஃபீஸ் 126 ரன்களுக்கு அவுட்டானார். 

இதையடுத்து 260 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. 205 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 55 ரன்களுக்குள் அடுத்த மூன்று விக்கெட்டுகளை இழந்தது. எனினும் அதற்கடுத்து ஜோடி சேர்ந்த ஹரிஷ் சோஹைல் மற்றும் ஆசாத் ஷாஃபிக் சிறப்பாக ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலியாவின் பவுலிங்கை நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிவரும் இருவருமே அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை கடந்து பாகிஸ்தான் அணி ஆடிவருகிறது. இந்த விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் பிரேக் கிடைத்தால்தான் ஆஸ்திரேலிய அணி மீண்டும் போட்டிக்குள் வரமுடியும். இல்லையென்றால் பாகிஸ்தான் அணி மெகா ஸ்கோரை எட்டிவிடும்.
 

click me!