கோலியை எதிர்த்த ரோஹித் சர்மாவிற்கு சேவாக் ஆதரவு!!

By karthikeyan VFirst Published Sep 7, 2018, 12:52 PM IST
Highlights

ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓபனிங் செய்யவைக்கலாம் என சேவாக் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓபனிங் செய்யவைக்கலாம் என சேவாக் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது. இந்த தொடரில் விராட் கோலி, ரஹானே, புஜாராவை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. 544 ரன்களுடன் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை குவித்த வீரராக கோலி திகழ்கிறார். ஆனால் மற்ற வீரர்கள் சரியாக ஆடவில்லை. 

ஓபனிங் மற்றும் பின்வரிசை மிடில் ஆர்டர் ஆகிய இரண்டிலும் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ராகுல் - தவான் தொடக்க ஜோடி இந்த தொடரில் சரியாக ஆடவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

டெஸ்ட் போட்டியில் ஓபனிங் இறங்க தயாராக இருப்பதாக ரோஹித் சர்மா வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தும் கூட, அவரை சேர்க்காமல் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் நான்காவது போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ராகுலுக்கு பதிலாக பிரித்வி ஷா சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. எனினும் ராகுல் தான் களமிறங்குவார் என தெரிகிறது. ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற குரல்களும் உள்ளன. முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் இந்த கருத்தை வலியுறுத்தியிருந்தார். 

இதற்கிடையே, ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து வேண்டுமென்றே கோலி ஓரங்கட்டுவதாகவும் ரோஹித்தை கண்டு கோலி பயப்படுவதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். தனது ரசிகர்களின் கருத்தை வழிமொழிவதுபோலவே, ரோஹித்தும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கோலியை அன்ஃபாலோ செய்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்கும் முன்னர் ரோஹித்தை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும். அவர் சரியாக ஆடாத பட்சத்தில் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம். இளம் வீரரான பிரித்வி ஷாவை அணியில் வைத்திருக்கலாம். ஆனால் ஆடும் லெவனில் சேர்க்க தேவையில்லை. அணியில் சீனியர் வீரர்களுடன் இருப்பது அவருக்கு பல வகைகளில் உதவும் என சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!