சாய்னா, சிந்து இரண்டாது சுற்றிற்கு முன்னேற்றம்

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
சாய்னா, சிந்து இரண்டாது சுற்றிற்கு முன்னேற்றம்

சுருக்கம்

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து உள்ளிட்டோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சாய்னா தனது முதல் சுற்றில் 12-21, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் போர்ட்னிப்பை தோற்கடித்தார். இதன்மூலம் சீன ஓபன் முதல் சுற்றில் போர்ட்னிப்பிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார் சாய்னா. அடுத்த சுற்றில் ஜப்பானின் சயாக்கோ சாட்டோவை சந்திக்கிறார் சாய்னா.

மற்றொரு இந்திய வீராங்கனையான சிந்து 21-13, 21-16 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் சுஸாந்தோ யூலியாவை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் சீன தைபேவின்யா சிங்குடன் மோதுகிறார் சிந்து.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் சீனாவின் கியாவ் பின்னை தோற்கடித்தார்.

மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா 22-20, 21-18 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டகுமா உயேடாவை வீழ்த்தினார்.

இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-15, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் சினிசுகாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான சாய் பிரணீத் 18-21, 18-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஜோர்கென்சனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமித் ரெட்டி ஜோடி 15-21, 8-21 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் சோல்கியூ சோய்-சங் ஹியூன் ஜோடியிடம் தோல்வி கண்டது

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து