
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறியுள்ள விராட் கோஹ்லி முதல்முறையாக 4வது இடத்தை பிடித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இதைத் தொடர்ந்து டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளார். விசாகப்பட்டினம் டெஸ்டில் 167 ரன், 81 ரன்கள் வீதம் குவித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி 97 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக சேகரித்து, 10 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே சிறந்த தரவரிசையாகும். இதற்கு முன்பு 10வது இடத்தை தாண்டியதில்லை.
முதல்முறையாக 800 புள்ளிகளை கடந்த விராட் கோலி மொத்தம் 822 புள்ளிகள் பெற்று இருக்கிறார். 800 புள்ளி என்ற மைல்கல்லை கடந்த 11வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். 20 ஓவர் போட்டி தரவரிசையில் முதலிடம், ஒரு நாள் போட்டியில் 2வது இடம் வகிக்கும் விராட் கோலி வருகிற 26ந்தேதி மொகாலியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டிலும் இதே போன்று அசத்தினால் முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு உருவாகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.