
சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இன்று தொடங்குகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
இதில், சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் போன்ற போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
டென்மார்க் ஓபன் உள்பட இந்தாண்டில் நான்கு பட்டங்களை வென்றுள்ள ஸ்ரீகாந்த், இப்போட்டியிலும் பட்டத்தை கைப்பற்றும் முனைப்போடு களமிறங்குகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா - சிந்து ஆகியோர் ஒரு கட்டத்தில் எதிர்கொள்கின்றனர்.
இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய், அஜய் ஜெயராம், சாய் பிரணீத், சமீர் வர்மா, செளரவ் வர்மா, காஷ்யப் ஆகியோர் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல மகளிர் பிரிவில் சாய்னா, சிந்து, ரிதுபர்னா, அனுரா ஆகியோரும் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் - சிரக் ஷெட்டி, மானு அத்ரி - ரெட்டி, அர்ஜூன் - ராமசந்திரன் ஆகிய இணைகள் நேரடியாக காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன.
மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி உள்ளிட்ட மூன்று இணைகள் தகுதி பெற்று களமிறங்குகின்றன.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி உள்ளிட்ட இரண்டு இணைகளும் தகுதப் பெற்று களம் காணுகின்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.