முதல் சுற்றிலேயே சாய்னா அதிர்ச்சித் தோல்வி…

Asianet News Tamil  
Published : Nov 17, 2016, 08:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
முதல் சுற்றிலேயே சாய்னா அதிர்ச்சித் தோல்வி…

சுருக்கம்

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் சாய்னா நெவால் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

சீனாவின் புஜெள நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சாய்னா 16-21,
21-19, 14-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் போர்ட்னிப்பிடம் தோல்வி கண்டார்.
ஒலிம்பிக் போட்டியின்போது சாய்னாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட சாய்னா, காயத்திலிருந்து மீண்ட பிறகு பங்கேற்ற முதல் போட்டியிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டுள்ளார்.

போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-12, 21-16 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் சியா ஷின் லீயை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் அமெரிக்காவின் பெய்வான் ஜங்கை சந்திக்கிறார் சிந்து.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-19, 20-22, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜூ சியூனை வீழ்த்தினார்.

மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 21-13, 21-13 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் லாங் ஆங்கஸை தோற்கடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து ஓடிஐ தொடரில் 2 இந்திய 'ஸ்டார்' வீரர்களுக்கு ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்.. பிசிசிஐ முடிவு!
சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்