
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழந்ததைத் தொடர்ந்து அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் ராட் மார்ஷ் தனது பதவியில் இருந்து விலகினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி, முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்து தொடரைக் கைப்பற்றியது. இதில் 2-ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ள ராட் மார்ஷ், "இது எனது தனிப்பட்ட முடிவு. யாரும் என்னை நிர்பந்திக்கவில்லை. இந்தப் பதவியிலிருந்து விலகலாம் என ஆலோசனை கூட கூறவில்லை' என்றார்.
மார்ஷின் விலகலைத் தொடர்ந்து இடைக்கால தேர்வுக்குழு தலைவரை தேர்வு செய்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு கூடியுள்ளது. அடுத்த தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் கில்லஸ்பி நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.