கமிஷன் உறுப்பினரானார் “சாய்னா நேவால்”

Asianet News Tamil  
Published : Oct 20, 2016, 02:07 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
கமிஷன் உறுப்பினரானார் “சாய்னா நேவால்”

சுருக்கம்

 

ஐ.ஓ.சி விளையாட்டு வீரர்கள் கமிஷன் உறுப்பினராக சாய்னா நியமனம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி) கௌரவமிக்க விளையாட்டு வீரர்கள் கமிஷன் உறுப்பினராக இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், சாய்னாவுக்கு அனுப்பி இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் சர்வதேச ஐஸ் ஆக்கி வீராங்கனை ஏஞ்சலா ருஜிரோ தலைமையிலான விளையாட்டு வீரர்கள் கமிஷனில் 9 துணைத் தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.

இலண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாய்னா ரியோ ஒலிம்பிக் போட்டியில் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பயிற்சியை ஆரம்பித்து இருக்கும் நிலையில் அவருக்கு இந்த அரிய பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது.

விளையாட்டு வீரர்கள் கமிஷனின் அடுத்த கூட்டம் நவம்பர் 6-ந் தேதி நடக்கிறது. ‘சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலில் சாய்னா அங்கம் வகிக்க இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறோம்’ என்று அவரது தந்தை ஹர்விர்சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Virat Kohli Retirement Date: விராட் கோலியின் ஓய்வு தேதி இதுதானா? 2027 உலகக்கோப்பை குறித்து அவரே சொன்ன தகவல்
Asian Games 2026: 3வது தங்கத்தை கையில் ஏந்திய இந்தியா! ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி அபாரம்!