
தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் குரூப் சுற்றில் இந்திய மகளிரணி 10-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.
தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்ஏஎஃப்எஃப்) சாம்பியன்ஷிப் போட்டியின் 15 வயதுக்கு உள்பட்ட (யு-15) பிரிவினருக்கான போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய ஆட்டத்தில் நேபாளத்தை எதிர்கொண்டது இந்தியா. ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் இந்தியாவின் லின்டா கோம் அணியின் கோல் கணக்கை தொடங்கினார். அவரே 32-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இந்திய அணி, முதல் பாதிக்குள்ளாகவே மேலும் மூன்று கோல்களை பதிவு செய்தது. இதில் சுனிதா 33-வது நிமிடத்திலும், சந்தியா 40-வது நிமிடத்திலும், பிரியங்கா 43-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.
இதனால், ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இந்தியா 5-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின்போது பிரியங்கா 53-வது நிமிடத்திலும், சுனிதா 62-வது நிமிடத்திலும் தங்களது 2-வது கோலை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மற்றொரு இந்திய வீராங்கனையான அனய் பாயி, 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியின் கோல் கணக்கை 8-ஆக உயர்த்தினார். இதனிடையே, பிரியங்கா தேவி, சுனிதா முன்டா ஆகியோர் ஹாட்ரிக் கோல் அடித்தனர்.
பிரியங்கா 76-வது நிமிடத்திலும், சுனிதா 86-வது நிமிடத்திலும் தங்களது 3-வது கோலை அடித்து நேபாளத்திற்கு ஒரு கோல் வாய்ப்பை கூட கொடுக்காமல் 10-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.