
நேற்று பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் அபாரமாக பந்து வீசி, 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.
இதுவரை 7 ஆட்டங்களில் மும்பை மற்றும் பெங்களுர் அணிகள் விளையாடியுள்ளன. நேற்றைய ஆட்டத்துடன் சேர்த்து, மேலும் 7 ஆட்டங்களே மீதம் உள்ளன. இவற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதனால் இந்த ஆட்டத்தில் தோல்வியால், பிளே-ஆப் சுற்றுக்கு நுழைவது மிகவும் கடினம். இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதியது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்களில் வென்றது. அதனால் நேற்றைய ஆட்டத்திலும் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியது மும்பை.
முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங் போட முடிவெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. மானன் வோரா 45, பிரான்டன் மெக்கலாம் 37, பெங்களுரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 32 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஹார்திக் பாண்டயா போட்டியின் 17 ஓவரில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
168 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பையின் டுமினி 23, குருணால் பாண்டயா 23 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் 50 ரன்கள் எடுத்து போராடி வந்த ஹார்திக் பாண்டயா அவுட்டானார். இதன் மூலம் பெங்களூர் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது. பெங்களூர் அணியின் உமேஷ் யாதவ், டிம் சைதி, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.